நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை மறுநாள் 4ஆம் தேதி , செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு தலைமை செயலகத்தில் வைத்து அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது.தமிழக பட்ஜெட் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.குறிப்பாக வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரை எப்படி இருக்க வேண்டும். எந்தெந்த துறைக்கு எந்த மாதிரியான விஷயங்கள் சொல்லப்போகிறார்கள். நகர்ப்புற பகுதிகளில் இன்னும் தேர்தல் நடைபெறதாது தொடர்பான விஷயங்களையும் அவர்கள் பேச இருக்கின்றார்கள்.
அதேபோல பல்வேறு மாவட்டங்களில் இருக்கக் கூடிய தொழில் வளர்ச்சி என்னவாக இருக்கிறது. புது தொழில் தொடங்குவதற்கான விஷயங்கள் எல்லாம் இந்த அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படும். அதுமட்டுமில்லாமல் இப்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரானோ வைரஸ்க்கு தமிழகத்தில் எந்த அளவுக்கு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள் என்பது தொடர்பாக இந்த கோட்டத்தில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.