Categories
மாநில செய்திகள்

JUST NOW : ‘வழக்கு வாபஸ் ஏன் ? திராவிட கழகம் விளக்கம் ..!!

நடிகர் ரஜினிக்கு எதிராக திராவிடர் கழகம் தொடரப்பட்ட வழக்கை  வாபஸ் பெற்றது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் புத்தக விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என தெரிவித்துள்ளது தமிழகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனிடையே நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க கோரி  50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டது. அதே போல இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்திலும் கடந்த 21-ந் தேதி வழக்கு தொடரப்பட்டது.

திராவிட இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தீடிரென வாபஸ் பெறப்பட்டது. இதற்கு தற்போது அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். அதில் நீதிமன்றத்தில் ஆஜரான போலீஸார் கம்ப்ளைன்ட் கொடுத்து ஒரு சில நாட்கள் தான் ஆகின்றது. எனவே அவர்கள் விசாரிப்பதற்கு காலஅவகாசம் வேண்டுமென்று கேட்டுக்கொண்டதால் வழக்கு இப்போது தொடரவேண்டுமென்ற அவசியமில்லை. மேலும் காவல்நிலைய வழக்கு 15 நாட்களுக்கு மேல் நடவடிக்கை  எடுக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்துக்கு  வாங்க என்று நீதிபதி தெரிவித்ததாக திராவிட கழகம் ரஜினி மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ் குறித்து விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |