Categories
மாநில செய்திகள்

JUST NOW : குரூப் 4 முறைகேடு – 5 மாவட்டங்களில் சிபிசிஐடி கிடுபிடி விசாரணை …!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக CBCID போலீசார் 5 மாவட்டங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த  வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது  சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும்  சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராமேஸ்வரம் , கீழக்கரை என முறைகேடு நடந்த 2 தேர்வு மையத்திற்கு சென்னையிலிருந்து சிபிசிஐடி அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்ய செய்ய இருக்கின்றனர்.

நேற்று 12 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மூன்று பேரை கைது செய்திருக்கிறார்கள். குறிப்பாக டிபிஐ அலுவலக உதவியாளர் ரமேஷ் , குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று எரிசக்தி துறையில் உதவியாளராக பணியாற்றும்  திருக்குமரன் , நிதீஷ் குமார் ஆகிய 3 பேரை  சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை  பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மூன்று பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் முயற்சியில் CBCID போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இரண்டாவது நாளாக விசாரணை சிபிசிஐடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாசில்தார் ராஜு என்பவரிடம் நேற்று இரவில் இருந்து தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இன்று காலை கடலூரில் ராஜசேகரன் என்பவரை பிடித்து இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் இடைத்தரகராக செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எழும்பூரில் உள்ள CBCID தலைமை அலுவலகத்தில் 10 பேரிடம் விசரனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதன் விசாரணையை விரிவு படுத்த பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக 5 மாவட்டங்களில் விசாரணை நடத்துகின்றனர்.இடைத் தரகராக செயல்படும் நபர்கள் என சந்தேகப்பட கூடிய நபர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் சென்னைக்கு நேரடியாக அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

நெல்லை , விழுப்புரம் , சிவகங்கை , தஞ்சாவூர் , கடலூர் என 5 மாவட்டங்களில் விசரணையை மேற்கொள்ளும் சிபிசிஐடி போலீசார் இடைத்தரகர்களாக சந்தேகப்படும்  நபர்களை அங்கிருந்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். கடலூரில் ராஜசேகர் என்பவர் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார். அவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்கிடையில் நெல்லையில் ஒருவர் பிடிபட்டு இருப்பதாக தகவல் தெரிய வந்திருக்கின்றது.

Categories

Tech |