பத்தாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் மூன்று ஆண்டுகள் சட்டப் படிப்பு படிக்க தகுதியானவர்கள் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
மூன்றாண்டு சட்டப் படிப்பை படிப்பதற்கு பத்தாம் வகுப்புக்கு பிறகு பிளஸ் டூ முடிக்க வேண்டும். அதற்கு பிறகு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என்று விதிகள் பார்கவுன்சில் அறிவித்து இருந்தது. ஆனால் பத்தாம் வகுப்புக்கு பிறகு டிப்ளமோ முடித்தவர்களும், பொறியியல் முடித்த பிறகு, பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை நிலவுவதாக ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அந்த வழக்கின் அடிப்படையில் இந்த கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், டிப்ளமோ படித்தவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் பார் கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை. +2 படிக்காமல், டிப்ளமோ படித்த பிறகு பொறியியல் முடித்திருக்கிறேன். ஆனால் தனக்கு சட்டபடிப்பில் இடம் கிடைக்கவில்லை என்று கோயம்புத்தூரை சேர்ந்த கோமதி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பார் கவுன்சில் தரப்பில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, மூன்றாண்டு டிப்ளமோ முடிப்பை முடித்த பிறகு, மூன்றாண்டு சட்டப்படிப்பை முடிப்பதற்கு தகுதியானவர்கள் என்று முடிவெடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி கார்த்திகேயன், இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டிருக்கிறார். சட்டப்படிப்பு தொடர்பான கொள்கைகளுக்கு விளக்க குறிப்பு வெளியிடுகிறார்கள்.
அப்படி வெளியிடும்போது பத்தாம் வகுப்புக்கு பிறகு டிப்ளமோ மூன்றாம் ஆண்டு படித்தவர்கள், பொறியியல் படித்தவர்களும், மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு தகுதியானவர்கள் தான் என்பது விளக்கமாக தெரிவிக்க வேண்டும் என்று பார் கவுன்சனுக்கு அறிவுறுத்தல் வழங்கி, நீதிபதி வழக்கை முடித்து வைத்து இருக்கிறார்.