கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் வி. மாமந்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. பள்ளியின் ஆறாம் வகுப்பு அறையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் நான்கு மாணவர்கள் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். படுகாயம் அடைந்த நான்கு மாணவர்களும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Categories