கேரள சட்டசபையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த வாசகத்தை ஆளுநர் உரையில் வாசிக்க மறுத்ததால் ஆளும் கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்த சட்ட மசோதாவை கண்டித்து கேரளா , மேற்கு வங்கம் , பஞ்சாப் மாநில சட்டமன்றங்களில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி அதிரடி காட்டின.
இந்நிலையில் இன்று கேரளா சட்டசபையில் ஆளுநர் வாசித்த உரையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து குறிப்பிட்டுள்ளதை வாசிக்க போவதில்லை என்று ஆளுநர் கூறியதால் ஆளுங்கட்சி கட்சி எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு, ஆளுநரின் முற்றுகையிட்டு ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி MLA_க்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் கேரள சட்டப்பேரவை வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.