Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்போ தான் மகன் வந்தான்… “மறுபடியும் அவன ஜெயில்ல போட்டுட்டாங்க”… தீ குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு..!!

மகன் மீது பொய் வழக்கு போடுவதாக கூறி தாய் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பேபி தனது கணவனை இழந்த நிலையில் மகன்கள் பிரேம்குமார் மற்றும் கார்த்திக்குடன் தங்கி இருந்தார். அவரது மகன்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வந்தது. அதோடு சில தினங்களுக்கு முன்புதான் கொலை வழக்கில் சிறைக்கு சென்ற கார்த்திக் விடுதலையாகி வீட்டிற்கு திரும்பினார். இந்நிலையில் நேற்று முன்தினம் மற்றொரு வழக்கை விசாரிக்க கார்த்திகை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

அதன்பிறகு அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து பேபி சில தினங்களுக்கு முன்பு தான் எனது மகன் சிறையில் இருந்து வெளியே வந்தான் என்றும் மீண்டும் அவன் மீது பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைப்பதாகவும் குற்றம் சுமத்தி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பதற்கு முயற்சித்துள்ளார். இதனை கண்ட காவல்துறையினர் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினர்.

Categories

Tech |