Categories
மாநில செய்திகள்

#JUSTNOW: தமிழகத்தில் தமிழகர்களுக்கே வேலை….. சென்னை சென்ட்ரலில் போராட்டம் …!!

தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே என வலியுறுத்தி தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகின்றது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முகப்பு பகுதியில் உள்ள நுழைவாயில் வளாகத்தில் தமிழ்நாட்டு வேலை தமிழர்களுக்கே என வலியுறுத்தி மனித சங்கிலி தமிழ் தேசிய பேரியக்கம் போராட்டத்தை நடத்தி வருகின்றது. தமிழர்களின் வேலை தமிழருக்கே என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நடைபெறும் இந்த போராட்டத்தில் 200க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமிழகத்த்தில் உள்ள வேளைகளில் அதிகளவில் வட இந்தியர்கள் நியமிக்கப்பட்டத்தை கண்டிப்பதோடு ,  தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு பறிபோவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகள் சார்ந்த வேலை வாய்ப்பினை 90% வழங்க வேண்டும் , அங்கு வெளிமாநிலத்தில் இருந்து பணிபுரியும் வெளி மாநிலத்தவர்களை உடனடியாக  திருப்பி அனுப்ப வேண்டும் என்ற உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.

Categories

Tech |