டெல்லி வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைசர் அமித்ஷா இன்று பதிலளிக்க இருக்கின்றார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு தொடங்கியது முதலே டெல்லி கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 23ம் டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்கமெழுப்பினர். இதனால் நாடாளுமன்றத்தில் அலுவல்கள் ஏதும் எடுக்கப்படாமல் முடங்கியுள்ளது.
நாடாளுமன்றம் ஹோலி விடுமுறைக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று டெல்லி வன்முறை தொடர்பாக விவாதம் நடைபெறும் என சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார். மேலும் விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பதிலளிக்கவுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் டெல்லி வன்முறை குறித்து மக்களவையில் இன்று மாலை 5.30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க இருக்கின்றார்.