குடியுரிமை திருத்த சட்டமசோதாவை விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தமிழக சட்டசபையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. நேற்று தொடங்கிய ஆளுநர் உரையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க வேண்டுமென்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவின் 2ம் நாள் நிகழ்வு தொடங்கியது. இதில் மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் தனபால் இரங்கல் குறிப்பு வாசித்தார். இதையடுத்து பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் 15 நிமிடங்களுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து குடியுரிமை திருத்தச்சட்ட மசோதா குறித்து விவாதிக்க திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.