Categories
அரசியல் மாநில செய்திகள்

இங்க சும்மா சொல்லுறாங்க… எல்லாமே தப்பா பண்ணுறாங்க… பாஜக மீது பாய்ந்த அதிமுக …!!

வேல் யாத்திரை நடத்திய பாஜக மீது தமிழக அரசு சார்பில் அடுக்கடுக்கான குற்றசாட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

100பேருக்கு மேல் நவம்பர் 16-ஆம் தேதிக்கு மேல் கூட கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்தும், வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் தமிழக அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பாஜக மீதும், வேல் யாத்திரை மீதும் அடுக்கடுக்கான குற்றசாட்டு முன்வைக்கப்பட்டன.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் நீதிமன்றத்தில் அளித்த விளக்கத்தில், கடந்த 6, 7, 8, 9ஆம் தேதிகளில் தமிழக பாஜக தரப்பில் தடையை மீறி யாத்திரை நடத்தியதாக பல இடங்களில் வழக்கு பதிவு செய்து, சுமார் 4000த்திற்கு அதிகமானோர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை யாரும் தனிமனித இடைவெளியை பின்பற்றவில்லை. ஒருவருக்கு ஒருவர் முகக்கவசம் அணிய வில்லை.

இது கோயிலுக்குச் செல்லக் கூடிய யாத்திரை என்று அறிவித்திருந்தாலும், இது கோவில் யாத்திரையாக தெரியவில்லை. முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையாகத்தான் நடத்தப்பட்டது. மத்தியில் ஆளுகின்ற ஒரு ஆளும் கட்சியாக இருக்கக் கூடிய பாஜக சட்டத்தை பின்பற்றவில்லை. கொரோனா காலத்தில் மத்திய அரசு சொல்லி இருக்க கூடிய விதிமுறைகளை அதை சார்ந்த தமிழக அளவிலான கட்சியே பின்பற்றவில்லை.

ஒரு 10 வாகனகளில் 30 பேர் மட்டுமே செல்வோம் என்று நீதிமன்றத்தில் கடந்த வாரம் தெரிவித்து விட்டு, இன்று அதற்கு மாறாக அதிக அளவிலேயே செல்கிறார்கள். பேசுவது ஒன்றாகவும், நடைமுறையில் அதற்கு எதிர்மாறாக நடந்து கொள்வதாகவும் தமிழக பாஜக மீது தமிழக அரசு அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்தது. இந்த வழக்கு மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |