பாலிவுட் சினிமாவில் வெளியான காஷ்மீரி பைல்ஸ் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் 90’களின் காலகட்டத்தின் போது காஷ்மீரில் இந்து பண்டிட்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட இந்து பண்டிட்கள் காஷ்மீரை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி மாபெரும் ஹிட் ஆனது.
இந்த படத்தை விவேக் அக்னிகோத்ரி என்பவர் இயக்கி இருந்தார். இந்நிலையில் விவேக் அக்னிகோத்ரி தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவருடைய அடுத்த படத்திற்கு கோவேக்சின் வார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த படம் மக்கள் அறியாத சில விஷயங்களைப் பற்றி பேசி இருக்கிறது என்பது தலைப்பில் இருந்தே தெரிகிறது. இந்நிலையில் இந்தியா தடுப்பூசிக்காக நடத்திய ஒரு யுத்தத்தில் மக்கள் அறிந்து கொள்ளாத பல விதமான சம்பவங்களை மையப்படுத்தி படம் அமைகிறதாம். மேலும் யுத்தத்தில் அறிவியல் பூர்வமாக வெற்றி பெற்றதையும் மையப்படுத்தி படத்தை இயக்கப் போவதாகவும் இயக்குனர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த ஆவலில் இருக்கிறார்கள்.