உலகளவில் கடந்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 5 லட்சம் ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச அளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 1 கோடி 81 ஆயிரத்து 545 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து ஆயிரத்து 298 நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 152 பேர் பலியான நிலையில், 25 லட்சத்து 96 ஆயிரத்து 537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் எண்ணிக்கை 13 லட்சத்து 15 ஆயிரத்து 941 ஆக அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து ரஷ்யாவில் பாதிக்கப்படவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 27 ஆயிரத்து 646ஆக அதிகரித்தது. இந்தியாவில் 5 லட்சத்து 29 ஆயிரத்து 577 பேரும், பிரிட்டனில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 250 பேரும், ஸ்பெயினில் 2 லட்சத்து 95ஆயிரத்து 549 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 59 லட்சத்து 59 ஆயிரத்து 667 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது 41 லட்சத்து 21 ஆயிரத்து 878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது.