Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன கொன்னுட்டு உங்கள காப்பாத்திக் கோங்க… வெளியானது மாஸ்டர் படத்தின் ‘பொளக்கட்டும் பரபர’..!

 ‘மாஸ்டர்’ படத்திலிருந்து சமீபத்தில் ’வாத்தி கமிங்’ பாடல் வெளியானதை தொடர்ந்து தற்போது ’பொளக்கட்டும் பரபர’ பாடலின் லிரிக் (Lyrics) வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் 3ஆவது சிங்கிள் பாடலான ‘பொளக்கட்டும் பர பர’ பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் – விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடித்துள்ள படம், ‘மாஸ்டர்’. இப்படத்தின் இசைவெளீயிட்டு விழா கடந்த மாதம் சிறப்பாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த மாதம் 14 ஆம் தேதி ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருந்தனர்.

இந்தநிலையில் அவர்களை ஆனந்த கடலில் ஆழ்த்த ’மாஸ்டர்’ படக்குழு தற்போது அப்படத்தின் ’பொளக்கட்டும் பர பர’ பாடலின் Lyrics வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த பாடலில் “உங்களுக்கு ரெண்டு நிமிஷம் டைம் தரேன்.. முடிஞ்சா என்ன கொன்னுட்டு உங்கள காப்பாத்திக் கோங்க” என விஜய் சேதுபதி மாஸாக பேசும் வசனத்துடன் அப்பாடல் துவங்குகிறது.

Categories

Tech |