Categories
தேசிய செய்திகள்

#justiceforkamaraj ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்…. குடும்பம் நடத்த வழி இல்லை…. கதறி அழும் டெலிவரி பாய்…!!!

வேலையில்லாமல் தவிக்கும் தன்னை காப்பாற்றுமாறு சோமட்டோ டெலிவரி பாய் கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் ஹிட்டேஷா சந்திராணி. இவர் தான் உணவு ஆர்டர் செய்த நிறுவனத்திடமிருந்து உணவு டெலிவரி செய்ய தாமதம் ஆனதால் டெலிவரி செய்யும் நபரிடம் வாக்குவாதம் ஏற்பட்டதில் அவர் தனது மூக்கிலே குத்தி விட்தாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோவாக வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இவருடைய இந்த கோரிக்கையை ஏற்ற அந்த நிறுவனம் டெலிவரி பாயான காமராஜ் என்று அந்த நபரை வேலையிலிருந்து நீக்கியது. இதையடுத்து காமராஜ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அந்த நபர் காவல்நிலையத்திலிருந்து ரூ.25,000 அபராதம் கட்டி வெளியே வந்ததாகவும், வேலை இல்லாமல் தவிப்பதாகவும், தனது குடும்பத்தை காப்பாற்ற வேறு வழி இல்லை என்றும் கண்ணீருடன் கதறி அழும் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி #justiceforkamaraj என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது.

Categories

Tech |