காற்றழுத்த தாழ்வு மண்டலமானது அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று புவியரசன் தெரிவித்துள்ளார். இதனால் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 22 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் வட தமிழக கடலோரம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று புவியரசன் தெரிவித்துள்ளார்.
Categories