அதிமுக-வில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு இடையே பகிரங்க மோதல் வெடித்துள்ளது. அதாவது சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பதற்கு வலியுறுத்தி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று (மார்ச்.4) திருசெந்தூர் வந்திருந்த சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சசிகலாவை சந்தித்ததற்காக ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓ.ராஜா நீக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.