Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN: அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க அரசு தயாராக உள்ளது…. பிரதமர் மோடி…!!!!

நாடாளுமன்றத்தில் அனைத்து விவாதங்களை குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் அனைத்து எம்.பி.க்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கொறடா  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று பேசிய பிரதமர் மோடி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது.

நாட்டின் குடிமக்கள் ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடரை விரும்புகிறார்கள். இதில் கேட்கப்படும் நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதிலளிக்கவும் அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகின்றனர். நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பாதை உருவாக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |