விவசாயிகள் போராட்டத்தின்போது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும் இதனை வரவேற்றுள்ளனர். அந்தவகையில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி வாபஸ் பெறுவதாக அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் விவசாயிகள் போராட்டத்தின்போது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்.
மேலும் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் தலா 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். போராட்டத்தில் தங்கள் உயிரை நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தெலுங்கானா அரசு சார்பில் ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.