Categories
மாநில செய்திகள்

#JUSTIN: அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து போராட்டம்…. 2,500 பேர் மீது வழக்குப்பதிவு…. பரபரப்பு…..!!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

அதன்பின் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ரூபாய் 5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் ரூ.5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் கைதான முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு மார்ச் 11 வரை சிறை விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் நேற்று(பிப்..28) சேலத்தில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் அனுமதி இன்றி சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட 2,500 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..

Categories

Tech |