Categories
தேசிய செய்திகள்

JUSTIN : அம்மாடியோ….! திருப்பதியில் சிறப்பு தரிசனத்துக்கு…. ரூ.1.50 கோடி டிக்கெட்….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சேவையில் பங்கேற்பதற்கு ஒரு நாளை தரிசனத்திற்கான டிக்கெட் விலை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடும் தலமாக இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனாவுக்கு முன்பாக குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது நிலைமை சீரடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய காரணத்தினால், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் நடைபெறும் சுப்ரபாதம். அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளை நேரில் பார்ப்பதற்கும், ஒரு நாள் முழுவதும் கோவிலிலிருந்து தரிசனம் செய்வதற்கும் சிறப்பு டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு டிக்கெட் சாதாரண நாட்களில் ஒரு கோடி ரூபாயாகவும், வெள்ளிக்கிழமையில் 1.50 கோடி ரூபாயாகவும் இருக்கும் என்று தேவஸ்தானம் நிர்ணயித்து தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விலையை கேட்ட பலரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |