மத்திய அரசு ஏழை எளிய மக்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானிய விலையில் வீடுகள் வழங்கி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில்திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மானிய விலையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் தவணைத் தொகையை விடுவிக்க லஞ்சம் கேட்டதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தில் தவணை தொகையை விடுவிக்க வேளாண்குடி ஊராட்சி பணிபார்வையாளர் மகேஸ்வரன் லஞ்சம் கேட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் கேட்டதால் விரக்தியடைந்து விஷம் குடித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.