அரசியல் சாசன தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மக்களவை தலைவர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: “பல்வேறு தடைகளுக்கு மத்தியில் நமது அரசியலமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டை இந்திய அரசியலமைப்பு ஒன்றுபடுத்துகிறது. நமது அரசியலமைப்பு என்பது பல்வேறு சட்ட விதிகளின் தொகுப்பு மட்டுமல்ல, பெரும் பாரம்பரியம்.
எதிர்கால தலைமுறையினர் நமது அரசியல் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தின் படி மக்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். ஆண், பெண் இருவரும் சமமாக கருதவேண்டும். அரசு இதனை சரியாக கடைப்பிடிக்கின்றது என்று அவர் பேசினார்.