தமிழகத்தில் சென்னை, திண்டுக்கல்,நாமக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த கல்லூரிகளில் காலிப் பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனால் பிற மதங்களை சேர்ந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பிற மதத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிதாக கல்லூரிகள் தொடங்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறங்காவலர் இல்லாமல்,நீதிமன்ற அனுமதி இல்லாமல் கூடுதல் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 3 வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.