ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கியது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி “போதைப் பொருட்களை நேரடியாக கையாண்டதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலதிபர் அர்பாஸ்க்கும், ஆரியன் கானுக்கும் இடையேயான வாட்ஸ் ஆப் உரையாடலில் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் இல்லை. ஒரே கப்பலில் பயணம் செய்தார்கள் என்ற காரணத்திற்காக மட்டும் ஆரியன் கானை போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புபடுத்த முடியாது” என்று நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு கடந்த அக்டோபர் 28ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Categories