Categories
மாநில செய்திகள்

#JUSTIN: இது எந்த விதத்தில் நியாயம்?…. கர்நாடகா அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்…..!!!!!!

மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது என்று தெரிவித்துள்ளார்.

அதாவது மேகதாது அணை கட்ட பட்ஜெட்டில் ரூபாய் 1,000 கோடி நிதி ஒதுக்கியது இந்திய இறையாண்மைக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முரணானது. ஆகவே சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமல் மேகதாதுவில் ஒரு பெரிய அணையை கட்ட நிதி ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயமாகாது என்று அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |