இந்து இந்துத்துவவாதி என்ற வார்த்தைகளுக்கு இடையில் தான் இந்திய அரசியலில் போட்டி என்று ராகுல்காந்தி எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.
விலைவாசி உயர்வு, கொரோனா நிவாரணம் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது. ஆனால் டெல்லியில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து இந்த போராட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் எம்பி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:” இந்து இந்துத்துவவாதி என்ற வார்த்தைகளுக்கு இடையில் தான் இந்திய அரசியலில் போட்டி ஏற்பட்டு வருகின்றது. நான் இந்து ஆனால், இந்துத்துவவாதி அல்ல. காந்தி ஒரு இந்து ஆனால் கோட்சே இந்துத்துவவாதி” என்று அவர் தெரிவித்துள்ளார்.