Categories
தேசிய செய்திகள்

 JustIn: இனி ரயில்களில்… மிக முக்கிய அதிரடி அறிவிப்பு… பயணிகளே கவனம்…!!!

இந்திய ரயில்வே கேடரிங் சேவை தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டிருப்பது பயணிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தங்களின் அன்றாட செலவுக்கு திண்டாட்டம் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். அதனால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே கேட்டரிங் சேவை தொடர்பான பல விதிமுறைகளை மாற்றியுள்ளது. அதன்படி இனி சில ரயில்களில் மட்டும் பேண்டரி கார் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பேண்டரிகளிலும் புதிதாக சமைக்கப்பட்ட உணவு கிடையாது என்று ரயில்வே தெரிவித்துள்ளது. பாக்கெட் உணவுகள் மற்றும் சாப்பிட தயாராக இருக்கும் உணவுகள் மட்டுமே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. நீங்கள் பதிவுசெய்யும் ரயிலில் பேண்டரி கார் வசதி இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு பயணம் செய்யுங்கள்.

 

Categories

Tech |