அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாக்கியுள்ள நிலையில், அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி,கேபி முனுசாமி மற்றும் சிவி சண்முகம் ஆகியோரை நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில், கழகத்திற்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு தவறுகள் செய்த காரணத்திற்காக எடப்பாடி பழனிசாமி, கேபி முனுசாமி,ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த ஜூன் 26 ஆம் தேதி முதல் நீக்கப்படுகிறார்கள். கழகத் தொண்டர்கள் யாரும் இவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ஆல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.