Categories
மாநில செய்திகள்

#JUSTIN: “இருளர்கள் பாம்பு பிடிக்க அனுமதி”… தமிழ்நாடு அரசு அரசாணை….!!!!!

தமிழகத்தில் இருளர் இனமக்கள் பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது. இந்த அரசாணை வாயிலாக விஷமுள்ள பாம்புகளை பிடிக்க இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்துக்கு முறையான அனுமதி கிடைத்து இருக்கிறது. பாம்புகளை பிடிக்க இருளர் இனமக்களுக்கு வனத்துறை அனுமதி வழங்காததால், உலக அளவில் புகழ்பெற்ற இருளர் இன மக்கள் பாம்பு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

விஷ முறிவு மருந்துகள் மற்றும் பாம்புக் கடிக்கு மருந்து தயாரிக்க கடும் விஷமுள்ள நாகம், கட்டுவிரியன், கண்ணாடிவிரியன் ஆகிய பாம்புகளை இருளர் இனமக்கள் பிடித்துக் கொடுத்து வந்தனர். இவற்றிற்கு அனுமதி கிடைக்காததால் விஷமுறிவு மருந்து தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் விஷமுறிவு மருந்துக்கான விஷமுள்ள பாம்புகளை பிடிக்க இருளர் இனமக்களுக்கு தற்போது தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |