Categories
மாநில செய்திகள்

JUSTIN: இல்லம் தேடிக் கல்வி திட்டம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்கள்….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால், பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியை போக்க தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்க்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இல்லம் தேடி கல்வி மையங்களாக செயல்படும் இடங்கள் பொதுமக்கள் பார்வையில் இருக்க வேண்டும். கற்றல்- கற்பித்தல் பணி நடைபெறும் போது பெற்றோர்கள் உடனிருந்து கண்காணிக்கலாம். பயிற்சியை நிறைவு செய்த தன்னார்வலர்கள் உடனடியாக மையங்களை தொடங்கி கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மையம் தொடங்கும் போது தன்னார்வலர் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |