Categories
மாநில செய்திகள்

#JUSTIN: உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்கள்…. எவ்வளவு பேர் தெரியுமா?…. அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில்  ரஷ்யா-உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் இன்னும் 2,223 தமிழக மாணவர்கள் சிக்கி தவிப்பதாக ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |