உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதலானது கடந்த மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நீடித்து வந்தது. உக்ரைனின் அண்டை நாடுகளான சுமி, கார்கிவ், மரியுபோல் ஆகியவற்றில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்து வந்த நிலையில், தற்காலிகமாக போரை ரஷ்யா நிறுத்தி வைத்தது. இதையடுத்து சுமியில் அமைக்கப்பட்டுள்ள மனிதாபிமான வழித்தடத்தில் பேருந்துகள் மூலமாக பொதுமக்கள் வெளியேறினர்.
மேலும் விமானங்கள் மூலமாகவும் சுமியில் தவித்த இந்திய மாணவர்கள் தாய் நாடுகளுக்கு திரும்பினர். இந்நிலையில் சுமியில் தவித்த இந்திய மாணவர்களுடன் கடைசி மீட்பு விமானம் தாயகம் திரும்பியது. ஆகவே இனிமேல் மீட்பு விமானங்கள் இயக்கப்படாது என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா தகவல் தெரிவித்துள்ளார்.