Categories
தேசிய செய்திகள்

JUSTIN : உயிர்காக்கும் கருவிகளுடன் வருண்சிங்கிற்கு சிகிச்சை…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து அவரது உடல் டிசம்பர் 10ஆம் தேதி ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த லெப்டினன்ட் ஜெனரல் அருண் விபத்து நடந்த போது மீட்பு பணியில் ஈடுபட்ட கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் தெரிவித்தார். பெங்களூர் விமானப்படை மருத்துவமனையில் வருணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். இந்நிலையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயமடைந்த வரும் சிங்கிற்கு உயிர்காக்கும் கருவிகளுடன் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும் சீராக இருப்பதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Categories

Tech |