உருமாறிய கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று தற்போது படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
உருமாறிய கொரோனாவை கண்காணிக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.