Categories
உலக செய்திகள்

#JUSTIN: எண்ணெய் இறக்குமதிக்கு தடை?….. உலக நாடுகள் எடுக்கும் முடிவு என்ன?…..!!!!!

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கனடா பிரதமர் ஐஸ்டீன் ட்ரூடோ அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யால் அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடையக்கூடும் எனவும் அதனால் ரஷ்யா பலனடையும் என்றும் கூறினார்.

மேலும் சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்த எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி உக்ரைனுக்கு ஆதரவாக டேங்கர் எதிர்ப்பு ஆயுதங்கள், வெடி மருந்துகளை அனுப்ப இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது தொடர்பாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Categories

Tech |