தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு. மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தபின் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க 60 ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை மையங்களில் 11 ஆயிரத்து 797 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கின்றன.
இந்த நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் 1, 2 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. வேடப்பட்டி பேரூராட்சியில் 2 வார்டுகளில் திமுக, ஒரு வார்டில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோட்டையாக கருதப்பட்ட தொண்டாமுத்தூரில் திமுக ஓட்டை போட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.