கோவையில் ஏழைகளுக்கு உணவளித்து வந்த சாந்தி கியர்ஸ் நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியம் இன்று காலமானார்.
நம் உலகில் மக்களில் பெரும்பாலான மக்கள் ஒருவேளை உணவுகூட இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு அவதிப்படும் ஏழைகளுக்கு கோவையில் ஐந்து ரூபாய்க்கு டிபன், பத்து ரூபாய்க்கு மதிய சாப்பாடு வழங்கி வந்தவர் சாந்தி கியர்ஸ் நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியம். அவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று 78 வயதுடைய அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் 1996ஆம் ஆண்டு தன் மனைவி சாந்தி பெயரில் சிங்காநல்லூரில் ஒரு உணவகம் நடத்தி வந்தார். அந்த உணவகம் மூலம் குறைந்த விலையில் உணவுகள், சாந்தி சோசியல் சர்வீஸ் மருத்துவமனை மூலம் குறைந்த கட்டணத்தில் மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கி வந்தார். இவ்வாறு பல்வேறு சமுதாய பணிகளை செய்து ஏழை மக்களுக்கு உதவி வந்த அவர் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.