Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஒமிக்ரான் அச்சுறுத்தல்…. ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்…!!!

தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து உள்ளது.  இதற்கு B 1.1. 529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயர் வைத்துள்ளது. இந்த தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் ரத்து செய்து வருகின்றது. இதுதொடர்பாக தமிழக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: “தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருவோரை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துமாறும், 8 நாட்களுக்குப் பின் மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தொடர்ந்து கண்காணிக்கவும், தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுப்பூசி கட்டுப்படுத்தும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |