Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஒமிக்ரான் பரவல்…..  மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்….!!!!

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் உருவான உருமாறி ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதனால் இவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்று அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 நெருங்கியது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஒமைக்ரான்  தொற்று பரவி வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். மேலும் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படியும் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |