32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. மகளிர் ஹாக்கிப் போட்டியில் வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியுடன் மோதிய இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது.
முயற்சி தோல்வியில் முடிந்தாலும் மைதானத்திலிருந்து இந்திய வீராங்கனைகள் கண்ணீருடன் வெளியேறினார். இருந்தும் முதல் முறையாக அரையிறுதி வரை சென்று பலரது இதயங்களை வென்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய மகளிர் ஆக்கி அணி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி இருந்தது. ஒலிம்பிக்கில் முதல் முறையாக இந்திய மகளிர் அணி பதக்கம் வெல்லும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் அடைந்தது.