ஓ சொல்றியா பாடலுக்கு தடை கேட்டு ஆண்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் புஷ்பா. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுன், பகத் பாசில் நடிகர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி வருகின்றது.
இந்நிலையில் இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகை சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்த பாடல் சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி இணையத்தில் வைரலானது. தற்போது இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவை சேர்ந்த ஆண்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த பாடலில் ஆண்களை காம எண்ணம் கொண்டவர்களாக மட்டும் சித்தரித்து எழுதப்பட்டதாகவும், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.