புதுச்சேரியில் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது. நவம்பர் 29ம் தேதி வங்கக்கடலில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பும் படி புதுச்சேரி மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
Categories