அமெரிக்காவில் அதிபரான ஜோ பைடனுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் அவருக்கு மயக்க மருந்து கொடுத்ததால், அதிபருக்கான அதிகாரத்தை குறுகிய நேரத்திற்கு மட்டும் துணை அதிபர் கமலாவிடம் அவர் ஒப்படைத்தார். இந்த தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டது.
அதன்படி, கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக 1.25 மணி நேரம் பதவி வகித்தார். அதிபர் ஜோ பைடனுக்கு மயக்க மருந்து கொடுத்ததை தொடர்ந்து தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக 1.25 மணி நேரம் பதவி வகித்தார். அமெரிக்காவில் அதிபராக பதவி வகித்த முதல் தமிழக பெண் என்ற பெருமையை பெற்றார் துணை அதிபர் கமலா ஹாரிஸ்.