தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
எனினும் கல்லூரி மாணவர்களுக்கு முன்பே அறிவித்தபடி ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டார். இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற இருப்பதால் அன்றைய தினம் நடைபெறவுள்ள தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்நிலையில் இளங்கலை மற்றும் முதுகலை செமஸ்டர் தேர்வுகள் பிப்ரவரி 4ஆம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.