காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ளதால் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னைக்கு தென்கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை அருகே கரையைக் கடக்கிறது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.