Categories
மாநில செய்திகள்

JUSTIN: ‘காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது’…? டி.டி.வி.தினகரன் ட்வீட்…!!!

காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது? என்று டிடிவி தினகரன் டுவிட் செய்துள்ளார்.

திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பூமிநாதன் என்பவர் ஆடுகள் திருடிய கும்பலை பிடிப்பதற்காக நேற்று தனியாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார். அப்போது அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர் இந்த சம்பவத்தை தொடர்ந்து 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் உயிரிழந்ததற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “திருச்சி மாவட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், திருடர்களால் வெட்டிக்கொலை கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது? என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |