சட்டசபை தேர்தலின் போது திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சியைப் பிடித்ததை தொடர்ந்து இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பெண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
திமுக அரசு அறிவித்துள்ள தேர்தல் அறிவிப்பு அறிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் இந்த தொகையானது விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.