தமிழகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்புடன் வாழ்வதற்காகவும், உரிமையை பெறுவதற்கும் குழந்தைகளுக்கான மாநில கொள்கையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் 1148 குழந்தைகளுக்கு நிதி உதவியும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் கருணை அடிப்படையில் 15 பேருக்கு பணி நியமன ஆணையையும் வழங்கினார்.
தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கை 2021 முக்கிய அம்சங்கள்:
பள்ளிகளில் எழும் பாலியல் புகார்களை விசாரிக்கவும் குழந்தைகளை பாதுகாக்கவும் போக்சோ சட்டத்தின்கீழ் அனைத்து பள்ளிகளிலும் புகார் குழு அமைக்கப்படும்.
குழந்தைகளை பாதுகாப்பதற்கு என்றே பிரத்யேகமாக பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை அமைப்பை உருவாக்கி செயல்படுத்தப்படும்.
அனைத்து குழந்தைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கை உறுதியாக கடைபிடிக்கப்படும்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும்.
குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான குறைதீர் அமைப்பு மேம்படுத்தப்படும்.