நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோன தடுப்பூசியை நடிகர் விவேக் செலுத்திக் கொண்டார். இதையடுத்து பேட்டியளித்த அவர், அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும். தடுப்பூசிகள் மக்கள் உயிரை பாதுகாக்கும் தடுப்பு நடவடிக்கை. அனைவரும் கட்டாயம் முக கவசம் அணியுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.